தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் பேசுகையில் :-

தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அமுதா நகர், கிரேஸ் நகர், ஸ்ரீராம் நகர், எஸ்.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இதனால் அந்த பகுதி முழுவதும் தார் சாலைகள் தோண்டப்பட்டு சாலைகள் முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக, அந்த பகுதி மக்கள் சாலைகளை கடப்பதற்கே பெரிதும் சிரமப்படுகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் அந்த சாலை முழுவதும் பொதுமக்கள் நடக்க கூட முடியாது நிலைதான் இருந்தது. அது போக எனது வார்டுகளில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் குழந்தைகள், பொதுமக்கள் என அனைவருமே தெருவில் நடந்து செல்வதற்கு கூட முடியாத சூழல் உள்ளது. சாலையை இரவு நேரங்களில் கடந்த செல்வதற்கு அச்ச உணர்வோடு கடந்து செல்கின்றனர்.
இதையும் கருத்தில் கொண்டு அமுதா நகர், கிரேஸ் நகர், ஸ்ரீராம் நகர், எஸ்.ஆர். நகர் ஆகிய பகுதிகளுக்கு விரைந்து புதிய தார் சாலைகள் அமைத்து தரவும், உப்பளம் பகுதி என்பதால் களிமண் நிறைந்த பகுதி இதனால் போக்குவரத்துகள் செல்வதற்கு இடையூறாக இந்த பகுதி காணப்படுவதால் விரைந்து தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கவும், தெருநாய்களை எனது வார்டுகளில் இருந்து அப்புறப்படுத்த தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கவுன்சிலர் சரவணகுமார் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்த மேயர் ஜெகன் பெரியசாமி :-

50 வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பணி நிறைவு பகுதியில் உள்ளது. பணி நிறைவு பெற்ற உடன் தார் சாலை அமைக்க பணியினை துரித படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தெரு நாய்க்களை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் ப்ளூ கிராஸ் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தங்களது கோரிக்கை மூலம் தங்கள் பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று கூறினார்.