தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாதாந்திர கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகராட்சி அதிமுக எதிர்கட்சி கொறடாவும், 51 வது வார்டு கவுன்சிலரும், வழக்கறிஞருமான மந்திர மூர்த்தி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு வரி குடிநீர் இணைப்பு வரி மற்றும் சொத்து வரி, தொழில் வரி, போன்ற வரிகளை உயர்த்தி உள்ளது. இதனால் மாநகராட்சி சார்பில் உயர்த்திய வரிகளை கட்ட முடியாமல் தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக எதிர்கட்சி கொறாடா கவுன்சிலர் மந்திர மூர்த்தி தலைமையில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிநடப்பின் போது கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி, ஜெயராணி, பத்மாவதி, வெற்றி செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.