தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் சந்திர போஸ் உட்பட மூன்று கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சந்திர போஸ் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் :-
மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்களுக்கு முன்பாக எங்களுக்கு தீர்மான நகல் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.
அந்த தீர்மான நகலின் பக்கம் 4, 5 ஆகிய பக்கங்கள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இருந்தது. எங்களுக்கு ஆங்கிலம் ஒன்றும் தெரியாது. நாங்கள் ஐ.ஏ.எஸ். பயின்று இங்கு வரவில்லை, சாதாரண ஆரம்ப கல்வி கற்று தான் வந்துள்ளோம்.
வீட்டின் சதுர அடிக்கு என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பொதுமக்களை பெரிதும் பாதிக்கும். நாங்கள் மாநகராட்சி மேயரையோ, அல்லது ஆணையரையோ கண்டித்து வெளிநடப்பு செய்யவில்லை, அமைச்சர் கே.என். நேரு இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தான் இந்த தீர்மானத்தை மூன்று தினங்களுக்கு முன்பாக தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தில் அறுவித்ததாகவும், தமிழ்நாடு முழுவதும் இந்த அறிவிப்பு அமல்படுத்தி தாகவும், மேயர் கூறினார்.
இதில் எங்களுக்கு எள்ளளவும் உடன்பாடு இல்லை, எனவே இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். இந்த தீர்மானங்களை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
தூத்துக்குடி
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - காங்கிரஸ் கவுன்சிலர்கள் கோரிக்கை!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி 50 வது வார்டு பகுதியில் தார் சாலை வசதிகள் அமைத்து தர கவுன்சிலர் சரவணகுமார் கோரிக்கை!!
அடுத்த
பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது - தமிழக வெற்றிக் கழகம் விஜய்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026