தூத்துக்குடி தாலுகா பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிகர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பிரேம்நாத், பிரவீன் ஆகிய சகோதரர்கள் இன்வெட்டர் பேட்டரி வாட்டர் தயாரித்து வணிகம் செய்து வருகின்றனர். மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த கிராமத்தில், இவ்விருவரும் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஒரே குடும்பமாக உள்ளனர்.
முன்னெச்சரிக்கையைக் கேட்காமல் தாக்குதல் போலீசார் முதலில் வழக்கே பதிவு செய்யாத நிலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் இவர்கள் மீது அரிவாளால் தாக்குதல் நடந்தது. அதன் பேரில் புகார் அளித்தும் சிப்காட் போலீசார் முறையான வழக்குகளை பதிவு செய்யவில்லை. ஊராட்சி பெரியோர்களின் தலையீடால் வழக்கு பதிவு தாமதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட குடும்பமே மிரட்டலுக்கு உள்ளானது.
26.10.2025 அன்று இரவு மீண்டும் அதே கும்பல் – அஸ்வின், பரத், முத்தமிழ் உள்ளிட்டவர்கள் மதுபோதையில் “ஜாதி திட்டல், ஊர் விட்டு வெளியேறு, வீட்டை விற்க வேண்டும், மாமுல் கொடு” என்று மிரட்டி அரிவாள்கள் மற்றும் கொடிய ஆயுதங்களால் கொலை முயற்சியாக தாக்கினர்.
சிப்காட் போலீசார் மீண்டும் தாமதித்து, குற்றவாளிகளுக்கு எளிதில் ஜாமீன் கிடைக்கக்கூடிய பிரிவில் மட்டுமே FIR 746/2025 பதிவு செய்தனர். கொலை முயற்சி பிரிவு சேர்க்கப்படாததால் குற்றவாளிகள் முன்ஜாமீனில் வெளியில் சுற்றியதால், பாதிக்கப்பட்ட குடும்பம் பயத்தில் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தது.
வணிக அமைப்புகளின் ஒன்றுபட்ட கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்ட அறிவிப்பு
தமிழ்நாடு அனைத்து வணிக சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு நாடார் அமைப்புகள், பல்வேறு சமூக மற்றும் மக்கள் நல அமைப்புகள் இணைந்து, சம்பவத்தை கொலை முயற்சியாக மாற்ற வேண்டும். சிசிடிவி பதிவை ஆய்வு செய்து மறுபடியும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஆதாரங்கள் அழிக்கப்படாது பாதுகாக்க வேண்டும். என கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் 24.11.2025 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி கோரப்பட்டது.
காவல்துறையின் அதிரடி – எஸ்.பி ஆல்பர்ட் ஜான், ஏஎஸ்பி மதன் நேரடி தலையீடு
கோரிக்கை மனுக்கள், அமைப்புகளின் அழுத்தம் மற்றும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஏஎஸ்பி மதன் அவர்கள் நேரடியாக பண்டாரம்பட்டிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
FIR-ஐ கொலை முயற்சி வழக்காக மாற்றி, சிறப்பு தனிப்படை அமைத்து, சிசிடிவி ஆதாரங்கள் ஆய்வு செய்து, முன்னர் சேர்க்கப்படாமல் விடப்பட்ட குற்றவாளிகளையும் வழக்கில் சேர்த்து பல முக்கிய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக, பண்டாரம்பட்டியில் உருவாக முயன்ற பெரிய ஜாதி மோதல் முற்றிலும் தடுக்கப்பட்டது.
பல்வேறு அமைப்புகள் ஒருமித்த பாராட்டு
தமிழ்நாடு அனைத்து வணிக சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு நாடார் பேரவை, அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை, காமராஜர் லட்சிய பேரவை, பெருந்தலைவர் மக்கள் நல அமைப்பு, பனங்காட்டு மக்கள் கழகம் மற்றும் பல சமூக அமைப்புகள் இணைந்து, "நேர்மையும் துணிச்சலும்கொண்ட காவல்துறை நடவடிக்கை, வணிகர்களின் உயிரைக் காத்தது" என பாராட்டின.
பாதிக்கப்பட்ட வணிக குடும்பத்திற்கு நீதி கிடைப்பதில் காவல்துறை எடுத்த இந்த உறுதியான நடவடிக்கை, தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு மீதான நம்பிக்கையை மேலும் பலப்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் வணிகர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஜாதி மோதலை முறியடித்த எஸ்.பி ஆல்பர்ட் ஜான் – ஏஎஸ்பி மதன் அதிரடி! பல்வேறு அமைப்புகள் பாராட்டு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு நாளில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!!
அடுத்த
ASP நடவடிக்கையில் காயம்: மூச்சுத்திணறலால் இந்து முன்னணி செயலாளர் மருத்துவமனையில் அனுமதி!!
இதையும் படிக்கலாம்
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!விசாரணை
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026