தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழக முன்னாள் முதல்வரும் திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் முழுஉருவ வெண்கலச் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கோவில்பட்டிக்கு வருகை தந்தார்.
அவரை வரவேற்கும் நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (நகர பணிமனை) தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் "கலைஞர் வழியில் – மக்கள் நலப் பயணத்தில்" என்ற முழக்கத்துடன் கலந்து கொண்டு, சமூக நலத்திற்காக இடைவிடாது உழைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்டத் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு தூத்துக்குடி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் உற்சாக வரவேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“உங்கள் வீடு தேடி வருகிறது மாநகராட்சி” — மக்களின் மனம் வென்ற மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!!
அடுத்த
தேச நலனுக்காக ஜார்க்கண்ட் முதல் கன்னியாகுமரி வரை ஸ்கேட்டிங் பயணம் — அஜய் விஸ்வகர்மாவுக்கு இந்து முன்னணி சார்பில் உற்சாக வரவேற்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026