தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் தூர்வாரும் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மழைக்காலத்தை முன்னிட்டு வடிகால் அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதற்காக மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் விரைவாகவும் தரமான முறையிலும் நிறைவடைய வேண்டும் என மேயர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர். மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களின் வசதிக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து மேம்பாட்டு பணிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், மழை காரணமாக குடியிருப்புகள் பாதிக்கப்படாமல் நகராட்சி முழுவதும் வடிகால் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.