தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மேற்கு காமராஜர் நகர், கணேசபுரம், ஜாஹிர் உசைன் நகர் வடக்கு தெரு, ஜாஹிர் உசைன் நகர் ஹௌசிங் போர்டு, சிலுவைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கியுள்ளது.
இந்நிலையில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று நிலைமைப் பார்வை மேற்கொண்டார். மழைநீரை உடனடியாக வெளியேற்ற மின் மோட்டார் இயங்குமுறை பணிகளை வேகப்படுத்தவும், அதிகளவு தேங்கியுள்ள பகுதிகளில் நீர் வெளியேற்றத்தை விரைவுபடுத்தவும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன், பள்ளமாக உள்ள சாலைகளில் சரள் அடிக்கும் மேம்பாட்டு பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஆர். கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பிளோமின்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சேவியர், கிளை செயலாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி: தொடர்மழை தாக்கம் – மாப்பிளையூரணி பகுதிகளில் ஆய்வு செய்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஒ.பி.எஸ் அணியில் புதிய நிர்வாகிகள் நியமனம் – ஒற்றுமை வலுக்கும் அமைப்பு விரிவாக்கம்!!
அடுத்த
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இரு நோயாளிகளுக்கு ஆறுதல் அளித்த எம்.எல்.ஏ ஜி.வி. மார்கண்டேயன்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026