திங்கட்கிழமையான இன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட சமக மாவட்ட செயலாளர் மாலைச்சூடி அற்புதராஜ் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் சூசைமுத்து அருள்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட மகளிர் அணி தலைவி சந்திரா, மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் சின்னத்துரை, மற்றும் முருகன், சுந்தர் ஆகியோருடன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :-


திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம் செல்லும் ரோட்டில் திருச்செந்தூரில் இருந்து 3 கிலோ மீட்டரில் ராமசாமிபுரம் மற்றும் முத்துநகர் என்ற ஊர்கள் உள்ளது.  

அங்கு சுமார் 200 வீடுகள் உள்ளது. சுமார் 800 பேர் வசிக்கின்றனர். அங்கு செந்தில் குமரன் எனும் மேல்நிலைப்பள்ளி உள்ளது.  ராமசாமிபுரத்தில் படிக்கும் மாணவர்கள்  கல்லூரிக்கும், பொதுமக்கள் மருத்துவமனைக்கும், மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும், அரசு அலுவலகங்கள் சென்று வருவதற்கும் திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம், திசையன்விளை, நாகர்கோவில், திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர்.

அவர்கள் சென்று வரக்கூடிய ராமசாமிபுரம் பஸ் நிறுத்தத்தில் செல்லும் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் மற்றும் திசையன்விளை பேருந்துகள் நிற்பதில்லை கேட்டால் இந்த இடம் அரசு பேருந்துகள் நிறுத்தும் ஸ்டாப் கிடையாது.  

ஆகவே நிறுத்த மாட்டோம் என்று கூறி பொதுமக்களை ஏற்றி புறக்கணிக்கிறார்கள் ராமசாமிபுரம் மற்றும் முத்துநகர் மற்றும் நாகர்கோவில் திசையன்விளை செல்ல வேண்டி உள்ளது.  

மக்கள் சாத்தான்குளம் சென்று வர வேண்டும் என்றால் திருச்செந்தூர் சென்று பஸ் பிடித்து மீண்டும் அந்த ஊரை கடந்து தான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் மிகுந்த காலவிரயம் மற்றும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.  

ஆகவே தாங்கள் தயவுகூர்ந்து பொதுமக்கள் வசதிக்காக ராமசாமிபுரம் பேருந்து நிறுத்ததில் அனைத்து அரசு பேருந்துகளும் நின்று பொதுமக்களை ஏற்றி இறக்கி செல்ல நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். என்று சமக சார்பில் கேட்டு கொள்கிறோம் என்று அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.