வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகள் மீது தமிழக அரசு விரைந்து அரசாணை வெளியீட கோரி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்கும் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.


அதன்படி திங்கட்கிழமை இன்று (07.04.2025) மாலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் சுவாமிநாதன் தலைமையில், மாவட்ட துணை தலைவர்கள் உமாதேவி, வாமணன், ஹெலன், அந்தோணி செல்வ சுதர்சன், மத்திய செயற்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், மாவட்ட இணைச் செயலாளர்கள் ஜஸ்டின் செல்லத்துரை, பாலமுருகன், சுகுணா, ஆகியோர் முன்னிலையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஞானராஜ் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார். தவமணி பீட்டர், மகேந்திர பிரபு, ஜெய பாக்கியம், மனோகரன், கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில துணை தலைவர் முருகன், மாநில செயலாளர் மாரிராஜா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கடேசன் நிறைவு உரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் நன்றியுரை ஆற்றினார்.

தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கைகள் :-

1. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களின் பணித்தன்மையினை கருத்தில் கொண்டு அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

2. (AGRI STACK) பணியில் நேரடியாக உள்வட்ட வருவாய் ஆய்வாளர்களை ஈடுபடுத்துவதனை ரத்து செய்து தொடர்புடைய அலுவலர்கள் மூலம் இப்பணியை மேற்க்கொள்ள நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

3. மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

4. கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரப்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்திட வேண்டும்.

5. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும்

என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நிர்வாகிகள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்பாட்டத்தில் ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.