முஸ்லிம் மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டுள்ள வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்தும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி ஆணையின்படி ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட விசிக சார்பில் விவிடி சிக்னல் பஸ் பேருந்து நிறுத்தம் அருகில் பெரியார் திடலில் இன்று (08.04.2025) காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டமானது தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் சிறுத்தை கணேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கோவில்பட்டி முருகன், மற்றும் தெற்கு மாவட்ட பொருளாளர் சி.பா. பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்றது.
விசிக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மேலிடப் பொறுப்பாளருமான கலைவேந்தன் கண்டன உரை நிகழ்த்தினார். தூத்துக்குடி தென்காசி மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் ஆர்பாட்டத்திற்கான ஒருங்கிணைப்புகளை செய்திருந்தார்.
சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கா.மை. முகமது இக்பால், எஸ்.டி.ஐ. கட்சி மாவட்ட துணைத் தலைவர் மைதீன் கனி, மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அசன், மாநில பொறுப்பாளர்கள் விசிக மேலிட பொறுப்பாளர் அகமது சாகிபு, மாநில துணைச் செயலாளர் விமல் வங்காளியர், முத்தமிழ் பாண்டியன், பெஞ்சமின், கதிரேசன், சுதாகர், பிரபாகரன், நிர்மலா, தமிழ்வளவன், சேகர்மோட்சம், ராஜ்குமார், மணிகண்ட ராஜா, தூத்துக்குடி மைய மாவட்ட பொறுப்பாளர்கள் மாரிமுத்து, செல்வக்குமார், ஜெகதீசன், மற்றும் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் திரளாக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.