தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன் முன்னிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் 53 வது வார்டு பகுதியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் அகற்றப்படவில்லை, தார் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதுகுறித்து மேயரிடம் மனு ஒன்றை அளித்தார்.

மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் அளித்த மனுவில் தெரிவித்ததாவது :-


தூத்துக்குடி மாநகராட்சி 53வது வார்டு முத்தையாபுரம் தெற்கு தெரு பகுதியில் சுமார் ஒன்றை ஆண்டு காலத்திற்கும் மேலாக கழிவு நீரை அகற்ற சிறிய கழிவுநீர் வாகனம் வராததாலும், அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க முன்வரவில்லை என்றும், இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.

கழிவு நீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்தப் பகுதியில் தார் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக கிடைப்பதால் புதிய தார் சாலை வசதிகள் அமைத்து தரவும், பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக செயல்படுத்த கோரியும் மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம் என்றும்.

கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி ஆர்பாட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் இவ்வாறு புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் அளித்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.