தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் இரண்டாம் கட்டமாக கணினி பட்டா வழங்கும் நிகழ்ச்சி டூவிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று காலை ஆட்சியர் இளம் பகவத் தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் முன்னிலையில் நடைபெற்றது. வருவாய் வட்டாட்சியர் முரளிதரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கணினி பட்டா கேட்டு பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடந்த (07.02.2025) பிப்ரவரி மாதம் சட்ட மன்ற அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் கணினி பட்டா வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு 3000 க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.
இந்த மனுக்கள் மீது படிப்படியாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முகாமின் போது அமைச்சர் கூறினார். அதன்படி கடந்த வாரம் (12.03.2025) அன்று டூவிபுரம் சட்ட மன்ற அலுவலகத்தில் வைத்து முதல் கட்டமாக 150 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண்னி பட்டாவை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
அதை தொடர்ந்து இன்று (23.03.2025) இரண்டாம் கட்டமாக 131 நபர்களுக்கு கணினி பட்டாவை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் பொதுமக்களுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், அண்ணா நகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், 30 வது வார்டு கவுன்சிலர், கல்விக் குழு தலைவி அதிஷ்ட மணி, 30 வது வார்டு வட்ட செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மார்க்கின் ராபர்ட், கவுன்சிலர்கள் கந்தசாமி, வைதேகி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் அபிராமி நாதன், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அண்ணா நகர் பகுதி செயலாளர் ஜெயக்குமார், மக்கள் தொடர்பு தூறை அதிகாரி நவீன் பாண்டியன், மற்றும் திமுக மாவட்ட, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
131 நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக கணினி பட்டா - அமைச்சர் வழங்கி தொடங்கி வைத்தார்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பள்ளிவாசலில் தொழுகை பேச்சு நிறுத்தி அமைதி காத்த அமைச்சர் கீதா ஜீவன்!!
அடுத்த
புதுக்கோட்டை மரம் வரம் டிரஸ்ட், நடுக்கூட்டுடன்காடு கோவில் நிர்வாகம், சன் ரைஸ் கபடி குழு இளைஞர்கள் நடத்தும் இலவச மருத்துவ முகாம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026