தூத்துக்குடி புதுக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் நடுக்கூட்டுடன்காடு கிராமத்தில் இன்று காலை 10 மணியளவில் மரம் வரம் அறக்கட்டளையின் சார்பில் 33 வது இலவச மருத்துவ பரிசோதனை முகாமானது புதுக்கோட்டை மரம் வரம் அறக்கட்டளை, நடுக்கூட்டுடன்காடு கோவில் நிர்வாகம், சன் ரைஸ் கபடி குழு இளைஞர்கள், நண்பர்கள் இணைந்து இலவச மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தினர்.

முகாமிற்கு புதுக்கோட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் கணபதி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தனர். தலைமை காவலர் செந்தில்குமார் உடன் இருந்தார்.
முகாமில் பொதுமக்களுக்கு எலும்பு முறிவு, எலும்பு தேய்மானம், மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை, ஆலோசனை, மருந்து மாத்திரைகள், வழங்குவதற்கும், இரத்தம், நீர், சளி, மலம், ஆய்வக பரிசோதனை பார்ப்பதற்கும், மற்றும் கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கண்புரை, கண்ணில் லென்ஸ் பொருத்துதல் கண்ணாடி தேவைப்படுபவர்களுக்கு சலுகை விலையில் கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் நடுக்கூட்டுடன்காடு கிராம கோவில் நிர்வாகிகள் ராமசுப்பு, ராஜேந்திரன், முத்துராஜ், சூர்யா சவுண்ட் சர்வீஸ் குமார், சன் ரைஸ் கபடி குழு மாரியப்பன், லெட்சுமணன், ஆனந்த ராஜ் இளைஞர்கள், நண்பர்கள், ஊர் பொதுமக்கள், புதுக்கோட்டை மரம் வரம் அறக்கட்டளை தலைவர், செயலாளர், பொருளாளர், மரம் வரம் அறக்கட்டளை நிர்வாகிகள், நடுக்கூட்டுடன்காடு கிராமம் கோயில் நிர்வாகிகள் கந்தசாமி, மரம் வரம் நிர்வாக இயக்குனர் ராம(ன்)கிருஷ்ணன், ஆகியோர் மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

கருப்பு பக்கம் திரைப்பட நடிகரும், மருத்துவருமான டாக்டர் வி.பி.எம். பழனி மகாராஜன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முகாமிற்கான பல்வேறு உதவிகளை விஏஓ பொன் பாரத் செய்திருந்தார்.
நாகர்கோவில் பெஜான்சிங் மருத்துவமனை, திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனை, ஜீவநதி இரத்த பரிசோதனை நிலையம் ஆகிய மருத்துவக் குழுவினர்கள் மருத்துவ முகாமில் பங்கேற்றனர். இந்த முகாமில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று தங்கள் உடல்களை இலவச பரிசோதனை செய்து கொண்டு, மரம் வரம் அறக்கட்டளை, நடுக்கூட்டுடன்காடு கோவில் நிர்வாகம், மற்றும் சன் ரைஸ் கபடி குழு இளைஞர்கள் நண்பர்கள் அனைவருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இறுதியில் குருதி கொடையாளர் மகேஷ்க்கு மரம் வரம் ராமன், டாக்டர் செந்தமிழ் செல்வன், டாக்டர் அருண், பானு நாச்சியார், விஏஓ பொன் பாரத் ஆகியோர் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. முகாமில் உதவி ஆய்வாளர் கணபதி மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
