தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு இணைந்து நடத்தும் பசைமயத்தவர்களும் பங்கேற்கும் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி, மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது தூத்துக்குடி ஏ.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.



தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்ட தலைவர் செய்யது அலி தலைமை வகித்தார். காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்  அஜிஸ், சிராஜ், அபுதாஹிர், அறுசுவை இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், தூத்துக்குடி காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் ஷாஜகான், மாநகர் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் முரளிதரன், தொழிலதிபர் சாத்தூர் செய்யது இப்ராஹிம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராஷா, தூத்துக்குடி மாநகர மஹல்லாக்களின்  கூட்டமைப்பு தலைவர் கே.எம். கபூர், இயக்குனர் நற்செய்தி நடவும் பெண் சிகர் லூசன், அய்யா வழி கிருஷ்ணவேணி கணேசன், எச்.எம்.எஸ். மாவட்ட தலைவர் ராஜலட்சுமி ராஜ்குமார், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அகமது இக்பால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் யூசப், திராவிடர் விடுதலைக் கழகம் பால். பிரபாகரன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி பாத்திமா பாபு, மாவட்ட செயலாளர் அசன், தலைவர் எம்.எஸ்.எப். ரஹ்மான், மாவட்ட செயலாளர் மின்னல் அம்ஜத், தாயக மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது, இந்திய தேசிய லீக் மாவட்டச் செயலாளர் ஷேக் மைதீன், தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சேமா. சந்தணராஜ், மாவட்ட பொருளாளர் பு.இ.மு. சுஜித், மாவட்ட செயலாளர் YMJ அப்பாஸ், MMMK மாவட்ட செயலாளர் முஹம்மது ஜாண், நுகர்வோர் பாதுகாப்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொன்வேல் ராம்குமார், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி, பள்ளிவாசல் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் அறுசுவை மீராசா, ஐஎஃப் டி என். மாவட்ட பொறுப்பாளர் முகமது குட்டி, ஐஎஃப் டி என். தூத்துக்குடி மண்டல பொறுப்பாளர் காயல் தரவை அலி பாய், எஸ்டிபிஐ மைதீன் கனி, தமிழ்நாடு வணிகர்  சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தெர்மல் ராஜா, YMJ காதர் கனி, MAC காம்ப்ளக்ஸ் தலைவர் மீராசா, ஐஎஃப் டி என் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் மரைக்காயர், தமிழ் புலிகள் கட்சி மண்டல பொறுப்பாளர் செ. தாஸ், தமிழக மீனவ மக்கள் கட்சி நிறுவனர் கோல்டன் பரதர், தாயக மக்கள் கட்சி இப்ராஹிம், ஆதித்தமிழர் கட்சி ஊர்காவலன், தமிழர் முன்னேற்றக் கழகம் ராசா, தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கம் யூஜின், தந்தை பெரியார் திராவிடர் கழகம் பிரசாத், விழித்தெழு இளைஞர் சங்கம் பி.ஜே. பிரதீப், ஐஎஃப் டி என் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது பஃரூஸ், காங்கிரஸ் சிறுபான்மை துணைத் தலைவர் ஆரோக்கியம், ஐஸ்வர்யா கன்ஸ்ட்ரக்ஷன் புர்கான் அலி, தமுமுக முத்தை சிராஜ், IMMK மாவட்ட செயலாளர் ஷேக், எழுத்தாளர் அத்தேஸ், திமுக மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மதிமுக கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன், மற்றும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இறுதியில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

அறம் சமூக அறக்கட்டளை காதர் பாட்ஷா நன்றியுரை நிகழ்த்தினார்.