தேசிய முற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில் மக்கள் தலைவர் கேப்டன் ஆசியுடன், நாளைய தமிழகம் கழகப் பொதுச் செயலாளர் அண்ணியாரின் ஆணைக்கிணங்க புனித ரமலான் இஃப்தார் நோன்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முத்தையாபுரம் முகைதீன் ஆண்டவர் ஜூம் ஆ பள்ளிவாசல் எஸ்.கே.எஸ் திருமண மண்டபத்தில் வைத்து இன்று (23.03.2025) மாலை மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில், ஜமாத் தலைவர் செய்யது மரைக்காயர், முத்தையாபுரம் பகுதி கழகச் செயலாளர் சுரேஷ், மாவட்ட தொழிற்சங்க துணைத் தலைவர் அரசுமுத்து, முகம்மது, சம்சுகனி மறைக்காயர், மாநகரச் செயலாளர் (த.மு.மு.க) அப்பாஸ், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட கழக பொருளாளர் விஜயன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் வல்லரசு துரை, மாலதி, ராமகிருஷ்ணன், திருவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இராஜபொம்மு, மோகன்தாஸ் காந்தி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னத்துரை, செல்வம், கோபாலகிருஷ்ணன், ஜெயசிங், சந்தனராஜ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் ஜெயக்குமார், கருங்குளம் ஒன்றியம் மந்திரமூர்த்தி, தூத்துக்குடி ஒன்றியம் மயில்ராஜ், மாநகர பகுதி கழக செயலாளர்கள் மீளவிட்டான் பகுதி சுரேஷ், வட்டக்கோயில் பகுதி நாராயண மூர்த்தி, திரேஸ்பும் பகுதி ஊர்காட்டான்ரமேஷ், சண்முகபுரம் பகுதி பேச்சிமுத்து, அண்ணாநகர் பகுதி சிலுவை, கட்டபொம்மன் நகர் பகுதி அரசமுத்து, மாவட்ட கழக சார்பு அணி செயலாளர்கள் மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ரகுமான் பாட்ஷா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட தொழிற்சங்க பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் கந்தசாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பால்ராஜ், மாவட்ட மீனவர் அணி செயலாளர் லாரன்ஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் பாபு, மாவட்ட தொண்டரணி செயலாளர் கொம்பு மாடசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளி அணி செயலாளர் பல்க் முருகன், மாவட்ட தொழிற்சங்க பேரவை தலைவர் முருகன், மாவட்ட தொழிற்சங்க பேரவை பொருளாளர் சக்திவேல், மாவட்ட கழக மூத்த நிர்வாகி அக்பர், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் போட்டோ. கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர் தயாள லிங்கம் இஃப்தார் நோன்பு திறப்பு விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய முற்போக்கு திராவிட கழக முத்தையா புரம் பகுதி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
