இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில், அதிமுக தென்காசி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் காசிநாதபுரத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் தலைமையேற்றார். கூட்டத்தில் கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் சிறப்புரையாற்றி, மொழி உரிமைக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் தியாகம் தலைமுறைகள் தோறும் நினைவுகூரப்படும் என்றார்.


முன்னதாக, மொழிப்போர் தியாகிகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் MCP ஜீவா பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் P.T.R. ராஜகோபால், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின் (Ex.MC), முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வட்ட செயலாளர்கள் அருண், அந்தோனி ஸ்டாலின், சிறுபான்மை பிரிவு பிரபாகரன், வட்ட பிரதிநிதி ராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.