தூத்துக்குடி மாவட்ட மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், லிங்கம்பட்டியில் 25.01.2026 இன்று மாலை எழுச்சியுடன் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாணவரணி மாவட்ட அமைப்பாளர் வெ. அருண்குமார் தலைமை வகித்தார்.
சி. சரவணன் (மத்திய ஒன்றிய செயலாளர், கோவில்பட்டி), M. குருசங்கர் ராஜா (மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்) முன்னிலை வகித்தனர்.
முன்னிலை மற்றும் வரவேற்பு கூட்டத்தில் அ. மாரிச்சாமி (கிழக்கு ஒன்றிய செயலாளர், கோவில்பட்டி), R. கமலகண்ணன், செல்வாஸ் ந. செல்வன் (மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள்) முன்னிலை வகித்தனர். உ.ச. ராஜகுரு (மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்) வரவேற்புரை நிகழ்த்தினார். அ. கேசவநாராயணன் (மேற்கு ஒன்றிய செயலாளர், கோவில்பட்டி), வீரபொம்மதுரை, மலர் மு. பார்த்திபன் (மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள்) கலந்து கொண்டனர்.
மதிமுக ஆட்சிமன்ற குழு உறுப்பினர் இராணி செல்வின் M.A., M.Ed. சிறப்புரையாற்றினார். ஆ.எஸ். ரமேஷ் (மாவட்ட செயலாளர், தூத்துக்குடி மாவட்டம் – ஆட்சிமன்ற குழு உறுப்பினர்), விநாயகா G. ரமேஷ் (மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு) ஆகியோர் பங்கேற்றனர். மாநில நிர்வாகிகள் நக்கீரன், பேச்சிராஜ், கஜேந்திரன், முத்துச்செல்வன், T.V. சிவக்குமார், L.S. கணேசன், வனராஜன், ஆ. ஜெயசந்திரன், கோடையிடி இராமச்சந்திரன், தராசு மகாராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பி. காம். வேல்சாமி, திரிசூலம் H. பவுன்மாரியப்பன், எஸ். தெய்வேந்திரன், குருசாமி கிருஷ்ணன், A. ஆஞ்சலா (துணை செயலாளர்கள்), முருக பூபதி (மாநகர செயலாளர்), பால்ராஜ் (நகர செயலாளர், கோவில்பட்டி), முத்துப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளாக பெ. ராஜசேகர் (விளாத்திகுளம் மேற்கு), மணிராஜ் (விளாத்திகுளம் கிழக்கு), காளிச்சாமி (புதூர் கிழக்கு), K.S. சிவப்பாண்டியன் (கயத்தார் கிழக்கு), காளிராஜ் (கயத்தார் மேற்கு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொதுக்குழு உறுப்பினர்கள் பால்ராஜ், வீரபுத்திரன், ராமகிருஷ்ணன், ராமசாமி, பேரூர் கழக செயல்வீரர்கள் வையாபுரி முருகன் (கழுகுமலை), வேலுச்சாமி (கயத்தார்), முருகேசன் (புதூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அணிச் செயலாளர்கள் L. பாலசுப்பிரமணியன், மு. விக்னேஷ், த. செல்வகுமார் (மேல்நம்பிபுரம்), R. ரமேஷ், A. மாரியப்பன், செல்லிமுத்து, முரளி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நல்லிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் வே. இரஞ்சன் (அவைத்தலைவர்), காயல் அமானுல்லா (பொருளாளர்), வீரபாண்டி செல்லச்சாமி, ஆத்தூர் I. இலட்சுமணன், சுப. இராஜகோபால் (துணை செயலாளர்கள்), பொ. சிவஞானவேல் (தலைமை செயற்குழு உறுப்பினர்), மத்தேயூ ஜெபசிங் (அவைத்தலைவர்) பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர்கள் பி. ஆனந்தராஜ் (தூத்துக்குடி மேற்கு), பி. செந்தூர்பாண்டி (தூத்துக்குடி கிழக்கு), பி.எஸ். முருகன் (திருச்செந்தூர்), பலவேசபாண்டியன் (சாத்தான்குளம்), பொ. ஜெயக்கொடி (ஆழ்வார்திருநகரி), சோம. வள்ளிமுத்து (திருவைகுண்டம் மேற்கு), வீரபாண்டி சரவணன் (ஒட்டபிடாரம் கிழக்கு), இக்பால் (ஒட்டபிடாரம் மேற்கு), மாரிமுத்து (உடன்குடி), பிரபா செ. பாண்டியன் (கருங்குளம் தெற்கு), காலங்கரை கந்தசாமி (முன்னாள் ஒன்றிய செயலாளர்) கலந்து கொண்டனர்.
பொதுக்குழு மற்றும் இளைஞரணி சார்பில் அனல் செல்வராஜ், இரா. மோகன்சிங், யோகராஜ் (பொதுக்குழு உறுப்பினர்கள்), சரவணபெருமாள் (தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர்) பங்கேற்றனர்.
மதிமுக ஆட்சிமன்ற குழு உறுப்பினர் இராணி செல்வின் பேசுகையில்: “ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள். தமிழ் இலக்கியங்கள் ஒருங்கிணைந்த உலக மொழி.
மன்னிப்பு கடிதம் எழுதச் சொன்னபோது ‘மருத்துவம் தேவையில்லை’ என்று உயிர் துறந்தவர் நடராஜன். 1948-ல் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சம் பெற்றது. தமிழன் முன்னேற்றத்திற்காக உழைத்தவர் பெரியார்.
திருக்குறளை உலகிற்கு கொண்டு சென்றவர் எல்லிஸ் கவர்னர். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிக்காத கவர்னர் ஆர்.எஸ்.எஸ். ரவி, தமிழர் உணர்வுகளை அவமதிக்கிறார். ‘தமிழ்நாட்டிற்கு கவர்னரே வேண்டாம்’ என்ற கோரிக்கையில் 50 லட்சம் கையெழுத்துகளை மதிமுக பெற்றது. தமிழ்நாடு கவர்னர் சொல்வதை கேட்காது; கவர்னரே தமிழ்நாடு சொல்வதை கேட்க வேண்டும்.
மோடியை தமிழ்நாட்டிற்கு அழைத்தவர் வைகோ. ஆனால் பதவியேற்பு விழாவில் ராஜபக்சேவை அழைத்த நாளிலிருந்தே மதிமுக, மோடியை எதிர்க்க தொடங்கியது” என அவர் பேசினார். கூட்டத்தின் இறுதியில் ரா. ராஜ்குமார் (புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர்) நன்றி உரையாற்றினார்.