சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை, முன்னாள் அமைச்சர் மற்றும் கழக வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் மாற்று கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
வட சென்னை தெற்கு மேற்கு மாவட்டம், எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 99-வது வார்டைச் சேர்ந்தவர்களும், தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட சக்திவேல் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் போது தூத்துக்குடி முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம் உடனிருந்தார்.