தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 77வது ஆண்டு குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழா நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர், உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குடியரசு தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.