தூத்துக்குடி 45 வது வார்டு கட்டபொம்மன் நகர் முன்னாள் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாவட்ட தலைவர் திரு. நடராஜன் நாயக்கர் இன்று (09.04.2025) அதிகாலை 1 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரது இறுதிச்சடங்கு தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நாளை (10.04.2025) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.

இயற்கை எய்திய நடராஜன் நாயக்கரின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.தா. செல்லப்பாண்டியன் தற்போது நேரில் சென்று அவரது பூத உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்.