தூத்துக்குடி 45 வது வார்டு கட்டபொம்மன் நகர் முன்னாள் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாவட்ட தலைவரும், ஸ்ரீ வீரசந்தண மாரியம்மன் கோவில் பூசாரியுமான திரு. நடராஜன் நாயக்கர் அன்று (09.04.2025) அதிகாலை 1 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரது இறுதிச்சடங்கு தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அன்று (10.04.2025) காலை 11 மணியளவில் நடைபெற்றது.
இறைவனடி சேர்ந்த திரு. நடராஜன் நாயக்கரின் இல்லத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் நேரில் சென்று அவரது பூத உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்.
உடன் பிரையன்ட் நகர் பகுதி திமுக நிர்வாகிகள், 45 வது வார்டு பகுதி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
