கிராமங்களில் சிறிய அளவில் நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவிட அரசு வழங்கும் மானிய திட்டத்தில் விண்ணப்பங்கள் வழங்குவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். (நாட்களை நீட்டிப்பு செய்ய வேண்டும்) என்று மாவட்ட ஆட்சியருக்கு பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
2025-2026- ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறு அளவிலான (250 கோழிகள்/அலகு) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியத்தில் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார் வயதுடைய நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள தொழில் முனைவோர் 250 நாட்டுக் கோழிகள் வளர்த்திட குறைந்தபட்சம் 625 சதுரஅடி நிலம் இருத்தல் வேண்டும்.
இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிக்கு 250 நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கான விலையில் 50 சதவீதம் கோழிக் கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள், கோழித் தீவனங்கள் ஆகியவற்றிக்கான மொத்த விலையில் ரூ.1,65625/- மானியமாக மாநில அரசால் வழங்கப்படும். இத்திட்டத்தில் 30% தாழ்த்தப்பட்ட வகுப்பினர்/பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் பயனாளியோ அல்லது அவரது குடும்பத்தைச் சார்ந்தவரோ முந்தைய ஆண்டுகளுக்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்றவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பிக்கும் பயனாளிகள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா/அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம்/வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23, 2023-24 மற்றும் 2024-25ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவை அளிக்கவேண்டும்.
தகுதி வாய்ந்த திட்டம் செயல்படுத்திட விருப்பம் உள்ள பயனாளிகள் அவர்களது கிராமத்தில் அமைந்துள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி 25.06.2025-க்குள் விண்ணப்பம் அளித்திட மாவட்ட இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்.
நேற்று அறிவிப்பு கொடுத்து விட்டு இன்றுக்குள் விண்ணப்பங்கள் அழித்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறி இருக்கிறார்கள். ஒரு சில சாமானிய பயனாளிகளுக்கு இன்று காலை தான் இந்த தகவல் கிடைக்கப்பெற்று இருக்க கூடும். எப்படி உடனே இன்றுக்குள் விண்ணப்பங்களை தயார் செய்து கிராமத்தில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க முடியும். திடீர் என்று பயனாளிகள் அவர்களின் சொந்த காரணங்களுக்காக வெளியூர் சென்று இருக்க கூடும். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் மானியம் பெற விரும்பும் பயனாளிகளின் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வழங்குவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் (நாட்களை நீட்டிப்பு செய்ய வேண்டும்) என்று மானியம் பெற விரும்பும் பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி பண்ணை மானியம் பெறும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வழங்குவதற்கு நாட்களை நீட்டிப்பு செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியருக்கு பயனாளிகள் கோரிக்கை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் திருத்தேருக்கு பாதுகாப்பு கண்ணாடி கூண்டு - அமைச்சர், மேயர், அறங்காவலர் குழு தலைவர் ஆகியோருக்கு இந்த முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா சார்பில் நன்றி!!
அடுத்த
புதியம்புத்தூர் கிராமத்தில் தூத்துக்குடி முதல் சவரிமங்கலம் வரை புதிய பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுடன் பயணம் செய்த சண்முகையா எம்.எல்.ஏ!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026