ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் புதியம்புத்தூர் கிராமத்தில் தூத்துக்குடி முதல் சவரிமங்கலம் வரை இயக்கப்படும் தடம் எண் 55 C பேருந்து பழைய பேருந்தாக இயக்கப்பட்டு வந்த நிலையில்  பொதுமக்கள் புதிய பேருந்து இயக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் எம் சி. சண்முகையாவிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்  சட்டமன்ற உறுப்பினர் எம். சி. சண்முகையா இன்று (25.6.2025) புதிய பேருந்தை கொடியசைத்து இயக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேருந்தில்  பயணம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகரக் கிளை மேலாளர் ரமேஷ் பாபு தலைமை செயற்குழு உறுப்பினர் C.S.T செந்தூர்மணி, வர்த்தகர் அணி முத்துக்குமார், சிறுபான்மையினர் அணி ஞானதுரை, நெசவாளர் அணி செல்வம், முன்னாள் கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், சிவன்,  லிங்கராஜ், ஈசன்சுரேஷ் சற்குணம், தங்கத்துரை கருப்பசாமி, ஜெயமுருகன், காளியப்பன், மகளிரணி ஜெயா, பாபு, சொர்ணசேகர், பார்த்தீபன், சிதம்பரம், பாஸ்கர் ஓசநத்து கருப்பசாமி, போக்குவரத்து துறை மாடசாமி, சுதாகர், சரவணன், லிங்கசாமி, பரமசிவன், மலர்வேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.