பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தில் தை மாதம் 24-ம் தேதி (07.02.2026) நேற்று சனிக்கிழமையன்று வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பாஞ்சாலங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை முதல் வேதமந்திரங்கள் முழங்க அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


விழாவைத் தொடர்ந்து ஆலயக் குழு செயலாளர், பொருளாளர் மற்றும் சமுதாயப் பெரியவர்கள் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் நிர்வாகத் தலைவர், விழாக்குழுத் தலைவர், கௌரவ தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், துணைப் பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


புதிய நிர்வாகத் தலைவராக S. வேலுச்சாமி, விழாக்குழுத் தலைவராக வலசை V. கண்ணன் தேர்வு செய்யப்பட்டனர். கௌரவ தலைவர்களாக S. பொம்முசாமி நாயக்கர், N. தாமரை, S. மல்லுச்சாமி, M. ராஜா நாயக்கர், P. வெயில்ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவர்களாக S. முருகேசன், S. மொட்டையசாமி, R. கண்ணன், D. விஜய், துணைச் செயலாளர்களாக சிக்கல் சுரேஷ், V. முத்துக்குமார், M.S. குமார், SSK. பழனிச்செல்வம், துணைப் பொருளாளராக A. செண்பகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


மேலும் செயற்குழு உறுப்பினர்களாக A. ரவி, R.P. செண்பகராஜ், C. மெட்டையசாமி, A. ஆவுடையப்பன், C. முருகன், L. உமாபதி, G. வீரபொம்முதுரை, P. வீர சங்கர், M. ஸ்ரீராம கட்டபொம்முதுரை, M. கார்த்திக், L. வெங்கடேஷ், A. அய்யாச்சாமி (எ) அருள், J. ஜோதிபாசு, A. விக்னேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


புதிய நிர்வாகிகள் ஆலய பணிகளை சிறப்பாக முன்னெடுத்து செல்ல உறுதியளித்தனர். விழா ஏற்பாடுகளை ஆலயக் குழு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பாக மேற்கொண்டனர்.