தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கம் மற்றும் டிரஸ்ட் சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று (07.02.2026) மாலை தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ராமசாமி நாயுடு தலைமையில், டிரஸ்டி விவேகானந்தன் மற்றும் செயலாளர் ரெங்கசாமி முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற மார்ச் 19ஆம் தேதி நடைபெற உள்ள யுகாதி விழா (தெலுங்கு வருடப்பிறப்பு) தொடர்பாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, யுகாதி தினத்தன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் திருமண தகவல் பரிமாற்ற நிகழ்ச்சி, மதியம் பொதுக்குழு கூட்டம் மற்றும் மாலை யுகாதி விழாவை சிறப்பாக நடத்துவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் ரமேஷ் நாயுடு, மோஹன் நாயுடு வெங்கடகிருஷ்ணராஜன் நாயுடு, வெங்கடசுப்பிரமணியன் நாயுடு, ராஜா காந்தி நாயுடு, ஜெயக்குமார் நாயுடு, குப்புசாமி நாயுடு, என். சங்கர நாராயண நாயுடு, ஆதிநாத ஆழ்வார் நாயுடு, கே.ஆர். சுப்பிரமணியன் நாயுடு, வெங்கடேசன் நாயுடு, எஸ். சங்கர நாராயணன் நாயுடு, ஏ. சங்கரநாராயணன் நாயுடு, அங்குசாமி நாயுடு, செல்வராஜ் நாயுடு, முருகன் நாயுடு, ஏ. சங்கர நாராயணன் நாயுடு, பெருமாள் நாயுடு, நடராஜன் நாயுடு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
யுகாதி விழாவை உற்சாகமாகவும் சிறப்பாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என கூட்டத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி
யுகாதி விழாவை சிறப்பாக நடத்த தீர்மானம் – தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கம் & டிரஸ்ட் ஆலோசனை கூட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“பொய் பரப்பினால் பதில் வரும்” – எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டுக்கு பாஜக கடும் கண்டனம்!!
அடுத்த
பாஞ்சாலங்குறிச்சியில் அருள்மிகு வீரசக்கதேவி ஆலய வருஷாபிஷேகம் கோலாகலம் – புதிய நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்வு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026