இந்திய திருநாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி மேலவை தலைவர் தியாகத் தலைவி அன்னை சோனியா காந்தி அவர்களின் 79வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தனசேகர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ லஷ்மி மகாலில் சிறப்பு விழா நடைபெற்றது.

மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் தூத்துக்குடி பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. பெருமாள் சாமி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி (AICWC) தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி தலைமையேற்றார்.

AICWC மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவி இசக்கியம்மாள் அவர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் தேசியத் தொண்டர்கள் அனைவரும் தியாகத் தலைவி சோனியா காந்தியின் நீண்ட ஆயுளுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பிரார்த்தனை செய்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், பழங்குடியினர் பிரிவு மாநிலச் செயலாளர் முனியசாமி, மாவட்ட பொது செயலாளர் இக்னேஷியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், மாவட்ட செயலாளர் நேரு, ரூஸ்வெல்ட், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், முன்னாள் SC/ST பிரிவு தலைவர் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் சேகர், நெல்சன், சுரேஷ்குமார், முருகேசன், ஆனந்தராஜ், வழக்கறிஞர் செல்வம், காமராஜ், சேக்ஸ்பியர், தெர்மல் முத்து, SMT சுந்தர்ராஜன் வாசி ராஜன், அய்யாதுரை, ஏசுதாஸ், பழனி, ஐஎன்டியூசி சார்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ், பாலன், கிரிதரன், பிரபு ஆகியோர் உட்பட ஏராளமான தேசியத் தொண்டர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.