72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா – 2025, திருநெல்வேலியின் நேருஜி கலையரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் சட்டமன்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.ந. நேரு, கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி முனைவர் சகா. மா. சங்கர் அவர்களின் சகா கலைக்குழு வழங்கிய பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மாடு ஆட்டம், மரக்கால் ஆட்டம், பறையாட்டம், மயிலாட்டம், நையாண்டி மேளம் ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்தன.

அத்துடன் அரசு இசைப்பள்ளி மாணவர்களின் ஒயில் ஆட்டமும் சிறப்பாக நடைபெற்றது. கூட்டுறவை வலுப்படுத்தும் பல அரசுத் நலத்திட்டங்களும் விழாவில் எடுத்துக்கூறப்பட்டன. கலைக்கும் கல்விக்கும் ஒளி போர்த்திய விழாவாக இந்த கூட்டுறவு வார நிகழ்ச்சி அமைந்தது.