தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான காலண்டர், இன்று (17.12.2025) மாலை 6 மணிக்கு சங்கத்தின் நாயுடு சங்க கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் மற்றும் டிரஸ்டி திரு என். ராமசாமி நாயுடு அவர்கள் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் மற்றும் டிரஸ்ட் உறுப்பினர் திரு ஆர். ரெங்கசாமி அவர்கள் முன்னிலையில், சங்கத்தின் மேனேஜிங் டிரஸ்டி திரு ஜி. விவேகானந்தன் அவர்கள் வழங்கிய ஆலோசனையின் பேரில் காலண்டர்கள் ஆயுள் சந்தா உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ரமேஷ் நாயுடு, மோகன் நாயுடு, செல்லச்சாமி நாயுடு, ராஜா காந்தி நாயுடு, குப்புசாமி நாயுடு, சங்கரநாராயணன் நாயுடு, பெருமாள் நாயுடு, அங்கு சாமி நாயுடு, மந்திர மூர்த்தி நாயுடு, முருகன் நாயுடு, முன்னாள் எஸ்.ஐ. முருகன் நாயுடு, அழகிரிசாமி நாயுடு, வீரப்பெருமாள் நாயுடு, நடராஜன் நாயுடு, உள்ளிட்ட டிரஸ்ட் உறுப்பினர்கள், சங்கத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆயுள் சந்தா உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆயுள் சந்தா உறுப்பினர்கள் அனைவரும் தவறாது நமது சங்கத்தின் 2026 ஆம் ஆண்டு காலண்டரை பெற்றுக் கொள்ளுமாறு தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


அன்புடன்

தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கம், தூத்துக்குடி..