டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் நிகழ்ச்சி இன்று (14.04.2025) காலை தூத்துக்குடியில் தெற்கு காவல் நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்து நந்தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.



இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் கலந்து கொண்டு சட்டமேதையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், உட்பட மாவட்ட கழக செயல்வீரர்கள் உடன் இருந்தனர்.