தூத்துக்குடியில் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தூத்துக்குடி மாவட்டம் நடத்தும் முஸ்லிம்களை வேட்டையாடும் கெடுநோக்கத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் இன்று (13.04.2025) மாலை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை தலைவர் மௌலானா அல்ஹாஜ் ஷேக் முஹம்மது மிஸ்பாஹி தலைமையில், இந்திய முஸ்லிம் லீக் தலைவர் தூத்துக்குடி மீராசா மரைக்காயர், ஜாமிஆ பள்ளி வாசல் செயலாளர் ரஹ்மான், தமுமுக செயலாளர் யூசுப், மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான், நற்சேவை மன்றம் தலைவர் முஹம்மது ரஃபிக், அஹமது இக்பால், அபுபக்கர், கிதர் பிஸ்மி, ஹசன், முஹம்மது குட்டி, அஷ்ரப் அலி பைஜி, நவ்ரங். சஹாப்தீன், தூத்துக்குடி சம்சுதீன், காஜா முகைதீன், மற்றும் தூத்துக்குடி மாவட்ட அனைத்து வட்டார ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உலமாக்கள் ஆகியோர் முன்னிலையில், நடைபெற்றது.

உடன்குடி வட்டார ஜமா அத்துல் உலமா சபை அம்ஜத் அலி, தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை பொருளாளர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் சம்சுதீன் ரியாஜி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை அப்துல் அழீம் மஸ்லஹி துவக்க உரையை நிகழ்த்தினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், துணை தலைவர் காங்கிரஸ் கமிட்டி ஏபிசிவி. சண்முகம், மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன், எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர் அஹமது நவவி, தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை பொருளாளர் முஜீபுர் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் த.மு.மு.க பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி, மாநில மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல் மகபூப், தூத்துக்குடி மாநகர ஜமா அத்துல் உலமா சபை தலைவர் இம்தாதுல்லாஹ், உட்பட பலர் கண்டன உரையாற்றினார்கள்.

திருவைகுண்டம் வட்டார ஜமா அத்துல் உலமா சபை தலைவர் முஸ்தபா தீர்மானங்களை முன்மொழிந்தார். காயல்பட்டினம் வட்டார ஜமா அத்துல் உலமா சபை தலைவர் பாதுல் அஸ்ஹப் ஆலிம் ஃபாஸி, துஆ (பிரார்த்தனை) செய்தார். கோவில்பட்டி வட்டார ஜமா அத்துல் உலமா சபை தலைவர் அப்துர் ரஹீம் பைஜி நன்றியுரை நிகழ்த்தினார்.

ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அனைவரும் எழுந்து நின்று தங்களது தொலைபேசியில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்து மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களையும், கோஷங்களையும் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகள், மற்றும் பல்வேறு இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் திமுக மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், திமுக மாவட்ட கிளை, வட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.