தூத்துக்குடி 45 வது வார்டு கட்டபொம்மன் நகர் அரசு போக்குவரத்து கழக ஓய்வு டிரைவர் முருகன், 45 வது வார்டு திமுக வட்ட பிரதிநிதி சிவசுப்பிரமணியன் (எ) கல்யாணி, அரசு போக்குவரத்து கழக தொமுச பொதுக் குழு உறுப்பினரும், டிரைவர் செண்பக ராஜ் ஆகியோரின் தகப்பனாரும் முன்னாள் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாவட்ட தலைவரும், ஸ்ரீ வீரசந்தண மாரியம்மன் கோவில் பூசாரியுமான திரு. நடராஜன் நாயக்கர் அன்று (09.04.2025) அதிகாலை 1 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரது இறுதிச்சடங்கு தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அன்று (10.04.2025) காலை 11 மணியளவில் நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர்.
மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் சுப்பையா, மூக்கையா, சுரேஷ், சரவணன், 50 வது வட்ட கவுன்சிலர் சரவணகுமார், வட்ட பிரதிநிதி ரஜினி முருகன், தண்டாயுதபாணி, தொமுச நெல்லை மண்டல பொருளாளர் முருகன், தொமுச நிர்வாகிகள் கருப்பசாமி, லிங்க சாமி, மனோகர், முருகன், ராஜேந்திரன், படையப்பா, சுந்தர் ராஜ், ஜெகதீஸ், வேல்முருகன், ரமேஷ், குமாரசாமி, மாரிச்சாமி, தொமுச முன்னாள் நிர்வாகி வேலாயுதம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.தா. செல்லப்பாண்டியன் தலைமையில் முன்னாள் அரசு போக்குவரத்துத் துறை ஓய்வு சங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக முன்னாள் மாணவரணி செயலாளரும், தொழிலதிபருமான சரவணப்பெருமாள் தலைமையில் சீனிவாசா பைனான்ஸ் மேனேஜர் ஆறுமுகம், ரமேஷ் பிளவர் முன்னாள் பிஆர்ஓ விநாயகம், மற்றும் நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக தெற்கு மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச் சாமி தலைமையில் மாநகர செயலாளர் முருகபூபதி, எம்.எல்.எப். மாநில பொருளாளர் அனல் செல்வராஜ், மாநில எம்.எல்.எப். தலைவர் கஜேந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் யோகராஜ், மாவட்ட அவைத் தலைவர் பேச்சி ராஜ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் வீரபாண்டி சரவணன், மாநகர துணை செயலாளர் முருகேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், மதிமுக முரட்டு பக்தன் பொய்யாழி, வட்ட அவைத் தலைவர் பால்ராஜ் நாயக்கர் தெற்கு மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் சரவணப் பெருமாள், வடக்கு மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன், ஆகியோர் உடன் மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர்.
தொழிலதிபர்கள் ஏ.வி.எம். புரமோட்டர்ஸ் வெங்கடாசலம், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன், தொழிலதிபர் நெல்லை வாசு, வீரசக்க தேவி ஆலய குழு தலைவர் முருகபூபதி, துணை தலைவர் முருகேசன், வேல்சாமி, ஆலயக் குழு பொருளாளர் சுப்புராஜ் சௌந்தர், ஆலயக் குழு செயலாளர் செந்தில்குமார், சுபா கிராபிக்ஸ் சுப்புராஜ், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மல்லுச்சாமி, பண்பாட்டு கழகத்தின் மாநில காப்பாளர் பாஞ்சை கோபால் சாமி, தேமுதிக ஆதிலிங்கம், ஏழாம் பகுதி செயலாளர் அரச முத்து, பொதுக் குழு உறுப்பினர் ராஜ பொம்மு, இந்து முன்னணி மாவட்ட பிரதிநிதி வீரப்பெருமாள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டு இறைவனடி சேர்ந்த நடராஜன் நாயக்கரின் பூத உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்கள்.

