ஏப்ரல் 14ம் தேதியான இன்று டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 135 பிறந்தநாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளையொட்டி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெற்கு காவல் நிலையம் எதிரே உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அதன் தொடர்ச்சியாக புதிய பேருந்து நிலையம் கலைஞர் அரங்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்..
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் மாவட்ட கழக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டு அமைச்சரோடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.