சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 135 பிறந்தநாள் விழா ஏப்ரல் 14ம் தேதியான இன்று (14.04.2025) நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் தேசிய முற்போக்கு திராவிடக்  கழகத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தயாள லிங்கம் தலைமையில் தெற்கு காவல் நிலையம் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்து வீர வணக்க அஞ்சலி செய்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர், மாவட்ட பொருளாளர், செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்ட செயலாளர்கள், வட்ட பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.