தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் அமைந்துள்ள தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலய வருடாந்திர திருவிழா கடந்த சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பேரருட்தந்தை டோமினிக் அவர்கள் தலைமையில், மேதகு மேனாள் ஆயர் ஜீடு பால்ராஜ் (பாளை மறைமாவட்டம்) திருக் கொடியேற்றி திருவிழாவை சிறப்பித்தார். அருட்தந்தை ராபின் (பாளை மறைமாவட்டம்), அருட்தந்தை சந்தீஸ்டன் (புதியம்புத்தூர் பங்குத்தந்தை) ஆகியோர் திருப்பலியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருவிழாவின் போது தினமும் காலை திருப்பவணி, திருப்பலி நடைபெற்று, மாலையில் ஜெபமாலை மற்றும் மாலை ஆராதனை நடைபெற்றன.
முக்கிய நிகழ்வுகள்:
8ஆம் திருவிழா (27.09.2025, சனிக்கிழமை): நற்கருணை பவனி பேரருட்தந்தை சகாய ஜோசப் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி அருட்தந்தை அந்தோணி பாக்கியம் (அருப்புக்கோட்டை பங்குத்தந்தை) மறைஉரையாற்றினார். அருட்தந்தை பிரடின் (மதுரை அமலகம் பொருளாளர்) முன்னிலை வகித்தார்.
9ஆம் திருவிழா (28.09.2025, ஞாயிறு): பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையில் மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி (தூத்துக்குடி மறைமாவட்டம்) தலைமை தாங்கி மறைஉரையாற்றினார். அருட்தந்தை தீபக்சிங் ரொசேரியன் (பெங்களூரு துறவற சபை), அருட்தந்தை விஷால் (மணப்பாக்கம் உதவி பங்குத்தந்தை) முன்னிலை வகித்தனர்.
10ஆம் திருவிழா (29.09.2025, திங்கள்): அதிகாலை 4 மணிக்கு தேரடி திருப்பலி அருட்தந்தை மரிய அரசு (எம்.சவேரியார்புரம் பங்குத்தந்தை) தலைமையில் நடைபெற்றது. அருட்தந்தை ஞானப்பிரகாசம் (பல்லடம் பங்குத்தந்தை) மறைஉரையாற்றினார். பின்னர் பக்தர்கள் பங்கேற்ற தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது.
திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் பங்குத்தந்தை எஸ். வின்சென்ட் அடிகளார், உதவி பங்குத்தந்தை விவேக், கட்டளைகாரர்கள், அருட்சகோதரிகள், இறை மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தப்பட்டன.
தூத்துக்குடி
தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – ஆன்மீக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
லயன்ஸ் டவுன் பட்டா பிரச்னையில் மக்களின் பக்கம் நின்ற செல்லப்பாண்டியனுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்!!
அடுத்த
உப்பளம் மீதே கப்பல் தளம்? – தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026