தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் கருப்பு ஆடை அணிந்து ஆர்பாட்டமானது இன்று (25.03.2025) காலை சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற்றது.

பண்ருட்டியில் (23.02.2025) அன்று நடைபெற்ற மாநாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 10,000 தொகுப்பு ஓய்வூதியம் பெறுவதற்கு அகவிலைப்படி, நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளர்களுக்கும் சிறப்பு காலமுறை ஊதிய விகிதம், பெறுவோருக்கும், வெளியாதாரப் பணியாளர்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம், பொது விநியோகத் திட்டத்திற்கு தனித்துறை, டாஸ்மார்க் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம், ஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் நியமனம் மற்றும் பதவி உயர்வு, சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக அறிவித்து பணபலன்களை வழங்குதல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பார்கள். என்று (3.3.2025) அன்று மாவட்ட மையங்களில் மனித சங்கிலி போராட்டம், (13.03.2025) அன்று 4 மண்டலங்களில் மறியல் போராட்டம் ஆகிய போராட்டங்கள் நடத்தினோம்.
ஆனால் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் நம் கோரிக்கைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, எனவே நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு ஆடை அணிந்து மாநிலம் முழுவதும் 20 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திட மாநில மையம் முடிவு செய்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று தூத்துக்குடி மாநகர் பகுதி சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் அருகில், தூத்துக்குடி கன்னியாகுமரி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் மாநில துணை தலைவர் (TNGEU) தோழர். மரகத லிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயல் தலைவர் (TNGTEU) தோழர் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட செயலாளர் (TNGEU) தோழர். ரவி முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில பொதுச் செயலாளர் (TNGEU) தோழர். கணேசன் ஆர்பாட்ட உரை நிகழ்த்தினார்.
ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மாநில துணை பொதுச் செயலாளர் தோழர். செண்பக ராஜ், மாவட்ட தலைவர் (TNGTEU) தோழர். கண்ணன், மாவட்ட செயலாளர் (TNGTEU) தோழர். திருநில பாண்டியன், மாவட்ட பிரச்சார செயலாளர் (TNGTEU) தோழர். மாடசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொறுப்பாளர் (TNGTEU) தோழர். மாரிமுத்து நன்றியுரை ஆற்றினார்.