தமிழகம் முழுவதும் 14 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஒன்றாய் வாரத்துக்கு மேலாக காத்திருப்பு பட்டியலில் இருப்பதால் பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 91 வட்டார போக்குவரத்து அலுவலர்கள், 56 யூனிட் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு எண் வழங்குதல், வாகன உரிமையாளர்களின் பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல், வாகன வரி வசூல் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன.
ஆட்கள் பற்றாக்குறையால் ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பிப்பு, உள்ளிட்ட ஆவணங்கள் வழங்குவதில் பல நாட்களாக தாமதம் ஏற்படுகிறது. இதற்கிடையே 14 வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஒன்றை மாதமாக காத்திருப்பு பட்டியலில் இருப்பது வட்டார போக்குவரத்து அலுவலக பணிகளில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது :-
தமிழக முழுவதும் 21 ஆர்.டி.ஓ பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஒன்றரை மாதமாக 14 வட்டார போக்குவரத்து அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். தாம்பரம், சோளிங்கநல்லூர், தென்காசி, மார்த்தாண்டம், உள்ளிட்ட முக்கியமான ஆர்.டி.ஓ.,க்கள் அதில் உள்ளனர். எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.
இந்நிலையில் சில ஆர்.டி.ஓ., க்கள் இரண்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் ஓட்டுநர் உரிமம், புதிய வாகனங்கள் பதிவு உள்ளிட்ட பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு
காத்திருப்பு பட்டியலில் 14 ஆர்.டி.ஓ., க்கள்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நிதி கொடுக்காமல் தமிழகத்தை முடக்க மத்திய அரசு திட்டம் - அமைச்சர் குற்றச்சாட்டு!!
அடுத்த
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு ஆடை அணிந்து ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
“அலைமோதிய ஆதரவு: மேட்டுப்பட்டி பகுதியில் கீதா ஜீவனுக்கு உற்சாக வரவேற்பு – உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு!”
09 Apr 2026
“பத்திரிகையாளர் என்றால் யார்?” தகுதி இல்லா நியமனங்கள் குறித்து அரசுக்கு கேள்வி!!
25 Jan 2026
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த துரை வைகோ – முன்னாள் ராணுவ வீரர்களுக்காக நினைவு ஆலயம் அமைக்க பரிந்துரை!!
09 Nov 2025
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் வக்கீல் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!
09 Nov 2025