தமிழகத்தை ஏதாவது ஒரு வகையில் செயல்பட விடாமல் முடக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல் படுகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை வகித்தார்.
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுதாகர், பால் துரை, ஸ்டாலின், குமார் பாண்டியன், பாலமுருகன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், சரவணகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது :-
திராவிட மாடல் ஆட்சியில் ஏழை, எளியவர்கள், என அனைவரும் பலனடைந்து வருகின்றனர். தமிழகத்தை ஏதாவது ஒரு வகையில் செயல்பட விடாமல் முடக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்படுகிறது குறிப்பாக எந்த ஒரு திட்டத்திற்கும் நிதி கொடுப்பதில்லை தமிழகத்திற்கு முறையாக வழங்கக்கூடிய அனைத்து நிதி பகிர்வுகளையும் பாரபட்சம் இன்றி வழங்க வேண்டும்.
மத்திய அரசு தற்போது நம்மிடமிருந்து ஜிஎஸ்டி என்ற பெயரில் வரிகளை எல்லாம் விதித்து கொண்டு வசூல் செய்து கொள்கின்றனர் மச்சான் மாநிலங்களுக்கு எல்லாம் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து பாரபட்சம் காட்டுகிறது.
2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ. சண்முகையா உட்பட பலர் பேசினர்.
மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் ஜெஸி பொன் ராணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட துணை செயலாளர் குமாரூபன், ஆறுமுகப்பெருமாள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
நிதி கொடுக்காமல் தமிழகத்தை முடக்க மத்திய அரசு திட்டம் - அமைச்சர் குற்றச்சாட்டு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிறுபான்மையினருக்கு ரூ. 450 கோடி நிதி : தமிழக முதல்வர் ஸ்டாலின்!!
அடுத்த
காத்திருப்பு பட்டியலில் 14 ஆர்.டி.ஓ., க்கள்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026