தூத்துக்குடி, நவம்பர் 10:
தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று (நவம்பர் 9) நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் நியமன தலைவராக சுயம்புலிங்கம் இருந்தார். இம்முறை நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் தலைமைப் பொறுப்பிற்காக போட்டியிட்டார்.
மொத்தம் 83 வாக்குகளில் 81 வாக்குகள் பதிவான நிலையில், சுயம்புலிங்கம் 56 வாக்குகள் பெற்று, எதிரணி வேட்பாளர் விஜயை விட 31 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். விஜய் 25 வாக்குகள் பெற்றதாக தேர்தல் அலுவலர்கள் பார்த்தசாரதி, முரளி, மற்றும் கண்காணிப்பாளர் வழக்கறிஞர் கலைச்செல்வி முன்னிலையில் எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு, அமைதியான முறையில் நிறைவு பெற்றது. வெற்றி பெற்ற பின்னர் சுயம்புலிங்கம் தெரிவித்ததில், “கிரேன் உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட்டு, அவர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவேன்” என கூறினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கிரேன் உரிமையாளர்கள் சங்கத் தேர்தலில் சுயம்புலிங்கம் வெற்றி!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாலியில் கடத்தப்பட்ட ஒட்டப்பிடாரம் பகுதி தமிழர்களுக்கு அரசு உதவிக்கரம் – எம்.சி. சண்முகையா எம்எல்ஏ நடவடிக்கை!!
அடுத்த
மாலியில் கடத்தப்பட்ட ஐந்து தமிழர்களை மீட்க வெளியுறவுத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி கருணாநிதி எம்.பி வலியுறுத்தல்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026