தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு மாநகராட்சி 3 வது வார்டு சங்கரப்பேரி வீட்டு வசதி வாரிய மனை உரிமை தாரர்கள் நலச்சங்கம் சார்பில் அங்குள்ள கலியோலாவா பூங்காவில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான திறப்பு விழாவிற்கு மாநகராட்சி 3 வது வார்டு திமுக கவுன்சிலரும், நல சங்கத்தின் தலைவருமான ரெங்கசாமி தலைமை வகித்தார். நல சங்க செயலாளர் பாலு வரவேற்றார்.
கண்காணிப்பு கேமராவை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.
பொருளாளர் சங்கரலிங்கம், சட்ட ஆலோசகர் விஜயசுந்தர், ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், துணைத்தலைவர் தேவேந்திரன், துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், முருகேசன், செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், ஜெயபாலன், அந்தோணி பாக்கியம், மக்புல் பாஷா, கந்தசாமி, பாலசுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி, போல் பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.