தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள கிள்ளிக்குளம் வ.உ. சிதம்பரனார் வேளாண்மை கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் பார்த்தீனியம் (விஷப்பூண்டு) போன்ற ஆபத்தான கொடிமரங்களை அகற்றும் பணி உற்சாகமாக நடைபெற்றது.
இப்பணியை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி தலைமையேற்று மாணவ–மாணவிகளுடன் இணைந்து மேற்கொண்டார். பின்னர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய அவர், பார்த்தீனியம் மனிதர்களில் தோல் அழற்சி, ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவதுடன், கால்நடைகளின் ஆரோக்கியத்துக்கும், பால் உற்பத்தி தரத்துக்கும் தீங்கு விளைவிப்பதாக கூறினார்.
மேலும், இந்த செடி வேகமாக பரவி பிற தாவர வளர்ச்சியை தடைசெய்வதால், தொடக்கத்திலேயே அகற்றுவது முக்கியம் என்றும், 1 லிட்டர் தண்ணீரில் 4 கிராம் அட்ரசின் அல்லது 8 கிராம் 2,4-டி கலந்து தெளிப்பதும், மாற்று முறையாக 1 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் உப்பு கலந்து தெளிப்பதும் பயனுள்ளதாக இருக்கும் என விளக்கினார்.
மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்த பணி, கிராமப்புற சூழலுக்கு சுத்தமும் பாதுகாப்பும் அளிப்பதோடு, இளம் தலைமுறையில் சூழல் பொறுப்பு உணர்வையும் வளர்த்தது.
தூத்துக்குடி
கிள்ளிக்குளத்தில் மாணவர்கள் முன்வந்து விஷப்பூண்டு செடியுக்கு ‘வெட்டி எறி’ எச்சரிக்கை!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகரில் மழைநீர் அகற்றும் பணி வேகமெடுத்தது – துரித நடவடிக்கை தொடர்கிறதாக அமைச்சர் கீதா ஜீவன்!!
அடுத்த
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தில் மழைநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026