தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேக்கம் ஏற்படாத வகையில் அரசுத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு செய்து வருவதாகவும், துரித நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
புஷ்பாநகர், முல்லைநகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகளை நேரில் ஆய்வு செய்த அவர், தொடர்ந்து பெய்யும் மழையால் கதிர்வேல் நகர், தபால் தந்தி காலனி, பாரதி நகர், புஷ்பா நகர், கோக்கூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதை குறிப்பிட்டார்.
இந்த இடங்களில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், துறைமுக தீயணைப்பு வாகனம், நகர தீயணைப்பு வாகனம், மாநகராட்சி மின்மோட்டார்கள் என ஒருங்கிணைந்த முறையில் பணிகள் நடைபெறுவதாகவும் கூறினார்.
100க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றம் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 மின்மோட்டார்களும், திமுக சார்பில் 36 மின்மோட்டார்களும் என மொத்தம் 100க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு மழைநீர் வெளியேற்றம் வேகமாக நடைபெற்று வருகிறது எனவும், இன்னும் ஒரு வாரம் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் எந்த விதமான சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக உள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் கண்ணன், ராமர், நாகேஸ்வரி, பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், வட்டச் செயலாளர் மந்திரகுமார், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகரில் மழைநீர் அகற்றும் பணி வேகமெடுத்தது – துரித நடவடிக்கை தொடர்கிறதாக அமைச்சர் கீதா ஜீவன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“கிரிக்கெட் வீரர்களுக்கு சீருடை வழங்கி ஊக்கமளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்”
அடுத்த
கிள்ளிக்குளத்தில் மாணவர்கள் முன்வந்து விஷப்பூண்டு செடியுக்கு ‘வெட்டி எறி’ எச்சரிக்கை!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026