தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் புதியம்புத்தூரைச் சேர்ந்த லவ்லி பிரன்ட்ஸ் கிரிக்கெட் அணிக்கு, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா அவர்களின் ஏற்பாட்டில், தூத்துக்குடி கணேஷ்நகர் முகாம் அலுவலகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கிரிக்கெட் வீரர்களுக்கு சீருடைகள் வழங்கினார்.
நிகழ்வில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
“விளையாட்டு என்பது இளமைப் பருவத்தின் அவசியமான ஒன்று. பல இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான போட்டிகளைத் தேர்ந்தெடுத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கிரிக்கெட்டுக்கு அதிக ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த அணிக்கு சீருடை வழங்கும் பணியை முன்னெடுத்த ஒன்றிய செயலாளர் இளையராஜா பாராட்டப்பட வேண்டியவர்,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் விளையாட்டு துறையை உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் விளைவாக மாநில, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் வீரர்கள் தொடர்ச்சியாக சாதனைகள் படைத்து வருகின்றனர். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடும் அனைத்து வீரர்களையும் மனதார பாராட்டுகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் மாநில வணிக அணி இணை செயலாளர் உமாபிரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய செயலாளர் இளையராஜா, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமார், முன்னாள் தலைவர் செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
“கிரிக்கெட் வீரர்களுக்கு சீருடை வழங்கி ஊக்கமளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாப்பிளையூரணி ஊராட்சியில் மழைநீர் பிரச்சினை தீர்க்க MLA சண்முகையா அதிரடி ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி மாநகரில் மழைநீர் அகற்றும் பணி வேகமெடுத்தது – துரித நடவடிக்கை தொடர்கிறதாக அமைச்சர் கீதா ஜீவன்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026