தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக எஸ்.எம். சகாயராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நியமனம் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.எம். சகாயராஜ் இதற்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராகவும், மாநில மாணவர் காங்கிரஸ் செயலாளராகவும், தூத்துக்குடி பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராகவும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை திறம்பட வகித்துள்ளார். தனது அரசியல் பணியின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை நேரடியாக சந்தித்து அவர்களிடமிருந்து பாராட்டையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினராக செயல்பட்டு வரும் நிலையில், அவரது நீண்ட கால அனுபவம், கட்சிக்கான அர்ப்பணிப்பு மற்றும் இளைஞர்களிடையே உள்ள செல்வாக்கை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை தொடர்ந்து மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் முன்னோடி நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் பெரும் உற்சாகத்துடன் எஸ்.எம். சகாயராஜுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரது தலைமையில் தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி மேலும் வலுப்பெற்று புதிய எழுச்சி பெறும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.