ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மேற்கு காமராஜர் நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களைச் சுற்றி, மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் பார்வையிட்டு வழிகாட்டல்கள் வழங்கினார்.

மழைக்குப் பிந்தைய பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் வசிப்பிடங்களில் நீர் சுழற்சி செம்மையாக நடைபெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி உறுதி செய்தார்.

உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோட்ராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் T.T.C. ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஆர். கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், கிளைச் செயலாளர் ஜேசுராஜா, ஆனந்த், தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.