ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் அகிலாண்டபுரம் ஊராட்சி அகிலாண்டபுரம் கிராம மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பாஞ்சாலங்குறிச்சியில் கிராமத்தில் ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில் அகிலாண்டபுரம் கிராம மக்கள் எங்களது கிராமத்தில் ரேஷன் கிளைக் கடை அமைத்து தர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையாவிடம் கோரிக்கை வைத்தனர்.
உடனே மக்களின் கோரிக்கையை ஏற்று அகிலாண்டபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து இன்றைய தினம் புதிய நியாய விலை கடையினை அகிலாண்டபுரம் கிராமத்தில் செயல்படும் வகையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கிளை ரேசன் கடையை துவக்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் அறிவழகன், செயலாட்சியர் சுடலைமணி, கூட்டுறவு சார்பதிவாளர் ரேச்சல், கூட்டுறவு சங்க செயலாளர் மாரிமுத்து, கிளை செயலாளர் கருப்பசாமி, ஊராட்சி செயலாளர் முருகன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீரங்க பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் வீரமாமுனிவர், பணி மேற்பார்வையாளர் பரமசிவன் பாஞ்சாலங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதாகருணாநிதி, முறம்பன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி, சுடலைமணி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாடசாமி, ஆவரங்காடு கிருஷ்ணசாமி, அரசு ஒப்பந்தகாரர் முகமது,
மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
2 கிலோமீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வந்த அகிலாண்டபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று புதிய கிளை ரேஷன் கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி டி. சவேரியார்புரத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தை சண்முகையா எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி டி. சவேரியார்புரம் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழாவில் சண்முகையா எம்எல்ஏ வின் செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது!!
இதையும் படிக்கலாம்
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!விசாரணை
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026