தூத்துக்குடி டி. சவேரியார்புரம் பகுதியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைப்பதற்காக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வருகை தந்த சண்முகையா எம்எல்ஏவை அங்கன்வாடி குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து, சார் மாலை வணக்கம் என்று கூறி எம்எல்ஏ அவர்களை குழந்தைகள் வரவேற்றார்கள்.
அப்போது சண்முகையா எம்எல்ஏ கொஞ்சம் கூட யோசிக்காமல் அனைவருக்கும் மாலை வணக்கம் என்று இன்முகத்தோடு தெரிவித்ததோடு மட்டுமல்லாது, மழலைகளின் அன்பான வரவேற்பை கண்டு நெகிழ்ந்து சிறிது நேரம் அவர்களோடு உரையாடிய பிறகே புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அங்கன்வாடி கட்டிடத்தை பார்வையிட்டு கொண்டு இருக்கும் போது மழலைகளின் குறும்புத்தனமான செய்கைகளை கண்டு வியந்து மழலைகள் (அங்கன்வாடி குழந்தைகள்) செய்யும் சிறு, சிறு, குறும்புகளை பார்த்து ரசித்து கொண்டு இருந்தார். அங்கன்வாடி குழந்தைகளுக்கு சண்முகையா எம்எல்ஏ இனிப்புகள் வழங்கிய பின்னரும் மீண்டும் குழைந்தைகளோடு உரையாட தொடங்கி விட்டார்.
குழந்தைகளிடத்திலிருந்து பிரிய மனமில்லாது மீண்டும் அவர்களோடு உரையாடிய எம்எல்ஏ வின் செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தூத்துக்குடி
தூத்துக்குடி டி. சவேரியார்புரம் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழாவில் சண்முகையா எம்எல்ஏ வின் செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
2 கிலோமீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வந்த அகிலாண்டபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று புதிய கிளை ரேஷன் கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் முறம்பன் கிராமத்தில் ஆண்டி (ஆண்டி மேளம்) இல்ல பூப்புனித நீராட்டு விழா - முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026