தூத்துக்குடி டி. சவேரியார்புரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை ஒட்டப்பிடாரம் தொகுதி மேற்கு ஒன்றிய செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி சிறப்பு செய்தார். அங்கன்வாடி கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்த எம்.எல்.ஏ. அவர்களை அங்கன்வாடி குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சண்முகையா எம்.எல்.ஏ., இன்முகத்தோடு குழந்தைகளின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி பர்னான்டோ, பங்கு தந்தை குழந்தை ராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ் பாலன், சேவியர், திமுக தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி ரவி (எ) பொன்பாண்டி, முன்னாள் கவுன்சிலர் பாரதி, மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், துணை செயலாளர் எஸ்.ஆர். கணேசன், ஒன்றிய துணை செயலாளர் வசந்தா மேரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி ஆரோக்கிய மேரி, ஜெஸிந்தா, ரூபி, வளர்மதி, சிவபாலா, கிளைச் செயலாளர்கள் ராயப்பன், பிரின்சிகர், முன்னாள் அவைத் தலைவர் அம்புரோஸ், இளைஞரணி நெல்சன், பாரி, கௌதம், மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து டி.. சவேரியாபுரம் மெயின் ரோட்டில் சேதமடைந்த காணப்பட்ட மின்கம்பத்தை மாற்றி அமைப்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் உடன் ஆய்வு செய்தார்.
