ஒட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (2025 - 2026) ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சி திட்ட வகுப்புகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி. சண்முகையா தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் எல். ரமேஷ்,
கல்லூரி முதல்வர் கிரேசா ஜேக்கப், வட்டாட்சியர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,
சித்தார்த்தன், மற்றும் கல்லூரி பேராசியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
