தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி சித்தர் பீடம் ஆலயத்தில் சனி பெயர்ச்சி பெருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு அருள் பெறுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
மாசி 22ஆம் தேதி (06.03.2026) வெள்ளிக்கிழமை காலை 7.37 மணிக்கு சனி பகவான் மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகுகிறார். இதனை முன்னிட்டு பீடத்தில் உள்ள 9 அடி உயர சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், யாகம், தீபாராதனை நடைபெறுகிறது.
மேலும் சனிப்பெயர்ச்சி பரிகார பூஜை நடைபெற்று, பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்படும். விழாவை முன்னிட்டு மகா அன்னதானமும் நடைபெற உள்ளது. ஆன்மிக எழுச்சியுடன் நடைபெறும் இந்நிகழ்வில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சனி பகவானின் அருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இடம்: ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி சித்தர் பீடம், சித்தர் நகர், கோரம்பள்ளம், தூத்துக்குடி – 628101 தொடர்பு எண்: 94434 04832
அனைவரும் வருக… அருள் பெருக…