தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அனியாபரநல்லூரில், தமிழ்நாடு அரசின் பால் வளத்துறையின் சார்பில் 46.65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நவீன பால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பால் பண்ணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.
நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் வசந்தி, பால்வளத்துறை துணை பதிவாளர் மூர்த்தி, வட்டாட்சியர் தாஹீர் அகமது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், தாசன், வருவாய் ஆய்வாளர் பேச்சியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், தூத்துக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், முன்னாள் ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட மகளிரணி வேலம்மாள், கிளைச் செயலாளர் பொன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய நவீன பால் பண்ணை தொடங்கப்பட்டதன் மூலம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களுக்கு சேமிப்பு வசதி மேம்பட்டு, விநியோக செயல்பாடுகள் சீராக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.